மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும்

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும்

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2019 | 1:19 pm

Colombo (News 1st) நாட்டில் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, இன்று (22) சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக, முகமாலை – இந்திரபுரம் பகுதியிலுள்ள தற்காலிக குடிசைகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காற்றுடன் மழை பெய்ததை அடுத்து, தற்காலிக குடிசைகளின் கூரைகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த மழை பெய்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்