புற்றுநோய் கழிவுகளை தெல்லிப்பளைக்கு கொண்டுவந்தமைக்கு வலி. வடக்கு பிரதேச சபையில் கண்டனம்

புற்றுநோய் கழிவுகளை தெல்லிப்பளைக்கு கொண்டுவந்தமைக்கு வலி. வடக்கு பிரதேச சபையில் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2019 | 8:44 pm

Colombo (News 1st) யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 16 ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது, கீரிமலை பகுதியில் யாழ். மாவட்ட கழிவுகளைக் கொட்டுவதற்கு கொரிய அரசால் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த திட்டத்திற்கு எதிராகவும் சபையில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் கழிவுகளை எரியூட்டும் செயற்பாடு தொடர்பிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எரிக்கப்படும் குப்பையின் புகை 80 அடியில் வௌியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், 30 அடி உயரத்தில் வௌியேற்றப்படுவதாகவும் இதற்கு சரியான மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சஜீவன் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்