குவைத்திலிருந்து 60 பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து 60 பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து 60 பெண்கள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2019 | 11:50 am

Colombo (News 1st) தொழில் நிமித்தம் குவைத்திற்கு சென்று, அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான பெண்களில் 60 பேர் இன்று (22) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில், அந்நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 45 பேரும் அடங்குவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குவைத் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பிலிருந்த 15 பேரும் இன்று நாடு திரும்பியவர்களில் அடங்குவதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பணிப்பெண்களாக குவைத்திற்கு சென்ற மேலும் 173 பேர் குவைத் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்