8 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத் தொடருக்கான கோப் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

8 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத் தொடருக்கான கோப் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

8 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத் தொடருக்கான கோப் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2019 | 3:03 pm

Colombo (News 1st) 8 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத் தொடருக்கான கோப் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியினால் இந்த அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவையினூடாக முன்னெடுக்கப்பட்ட விமானக் கொள்வனவு உள்ளிட்ட பல விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதத்தை முன்னெடுப்பதற்கு நாளொன்றை ஒதுக்குமாறும் சுனில் ஹந்துன்னெத்தி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல ஏற்றுக்கொண்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நிதிக்குழுவின் அறிக்கையும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்தி தொடர்பான தகவல்கள் இந்த நிதிக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்