டென்மார்க்கிற்கான ட்ரம்பின் விஜயம் இரத்து

டென்மார்க்கிற்கான ட்ரம்பின் விஜயம் இரத்து

by Chandrasekaram Chandravadani 21-08-2019 | 9:42 AM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கிற்கான தனது விஜயத்தை இரத்து செய்துள்ளார். டென்மார்க்கின் இரண்டாம் இளவரசி மார்க்கிரட்டின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 2ஆம் திகதி டென்மார்க்கிற்கு விஜயம் செய்வதற்கு ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாக ட்ரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். எனினும், இந்தக் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடிக்ஸன் (Mette Frederiksen), கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல எனவும் அதனை வாங்க விரும்பும் ட்ரம்பின் யோசனை அபத்தமானது எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, டென்மார்க் வியக்கத்தக்க மக்களைக் கொண்ட மிகச் சிறந்த நாடு. ஆனால், பிரதமரின் கருத்துப்படி கிரீன்லாந்து தொடர்பிலான பேச்சுவார்த்தையை அவர் விரும்பவில்லை என்பது புலப்படுவதால் தனது விஜயத்தை பிற்போடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, டென்மார்க்கிற்கான ட்ரம்பின் பயணம் இரத்து செய்யப்பட்டதை வௌ்ளை மாளிகைப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.