வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற கிராம மக்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள்

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற கிராம மக்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள்

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற கிராம மக்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2019 | 7:45 pm

Colombo (News 1st) யாழ். வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற கிராம மக்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் இன்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தனர்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளர் – அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆலோசகர் Amy O’Brien உள்ளிட்ட குழுவினர் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற கிராம மக்களை இன்று காலை சந்தித்தனர்.

தையிட்டி கிராமத்தில் இடம்பெற்ற சந்திப்பில் காணி விடுவிப்பு, யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், இடம்பெயர்வுகளின் போது ஏற்பட்ட பிரச்சினைகள், தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் Sidonia Gabriel இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

Sidonia Gabriel உள்ளிட்ட குழுவினர், முல்லைத்தீவு தமிழர் மரபுரிமை பேரவையின் பிரதிநிதிகளை கோயில் குடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்