புதிய இராணுவத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய இராணுவத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2019 | 11:30 am

Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் 23ஆவது தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (21) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இராணுவத் தளபதியை வரவேற்கும் வகையில், இராணுவ தலைமையகத்தில் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன், மரியாதை அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.

புதிய இராணுத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்ற ஷவேந்திர சில்வா, விசேட சேவைக்கான விபூஷன விருது, வீரவிக்ரம வீபூஷன விருது, ரணவிக்ரம மற்றும் ரணசூர பதக்கங்கள் ஆகியவற்றை தன்வசப்படுத்திக் கொண்டவராவார்.

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கஜபா படையணியில் இருந்து இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட முதலாவது அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்