புங்குடுதீவில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

புங்குடுதீவில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

by Staff Writer 21-08-2019 | 11:00 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 16 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியிலிருந்து 8 பொதிகளில் பொதியிடப்பட்டு மறைத்துவைக்கப்பட்ட நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களின் கெப் வாகனமும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 29 மற்றும் 42 வயதான சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.