தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டீவன் ஸ்மித்

தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டீவன் ஸ்மித்

by Staff Writer 21-08-2019 | 8:24 AM
Colombo (News 1st) ஆசஷ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் ஸ்டீவன் ஸ்மித் உபாதைக்குள்ளானதுடன், அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஸ்டீவன் ஸ்மித்துக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மித்துக்குப் பதிலாக மூன்றாவது ஆசஷ் போட்டிக்கான அவுஸ்திரேலிய பதினொருவர் அணியில் Marnus Labuschagne பெயரிடப்பட்டுள்ளார். Marnus Labuschagne லோர்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்துக்குப் பதிலாக களமிறங்கியதுடன், இரண்டாம் இன்னிங்ஸில் அரைச்சதம் கடந்திருந்தார். இவ்வருட ஆசஷ் தொடரில் நிறைவுக்கு வந்துள்ள 2 போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித் 2 சதங்கள் உள்ளடங்களாக 378 ஓட்டங்களைக் குவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆசஷ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி லீட்ஸில் ஆரம்பமாகவுள்ளது.