இஸ்லாமிய திருமணம், விவாகரத்து சட்டங்களைத் திருத்த அமைச்சரவை அனுமதி

இஸ்லாமிய திருமணம், விவாகரத்து சட்டங்களைத் திருத்த அமைச்சரவை அனுமதி

இஸ்லாமிய திருமணம், விவாகரத்து சட்டங்களைத் திருத்த அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2019 | 1:26 pm

Colombo (News 1st) இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்களைத் திருத்தத்திற்கு உட்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தபால்துறை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன இணைந்து கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்தனர்.

இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என முஸ்லிம் சமூகத்தினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தொடர்ந்தும் வலியுறுத்தினர்.

அதற்கமைய, திருமணம் செய்வதற்கான வயதெல்லை, திருமணத்தைப் பதிவு செய்வதற்கான நடைமுறை மற்றும் மணமக்கள் தங்களின் விருப்பங்களைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டது.

சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு அதுகுறித்து சட்டவாக்கப் பிரிவினரிடம் ஆலோசனைகளைப் பெறவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்