இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப .சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப .சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப .சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Aug, 2019 | 3:16 pm

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப .சிதம்பரத்தை தேடப்படும் நபராக இந்திய அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

இரண்டு நாட்களாக ப.சிதம்பரம் இருக்கும் இடம் தெரியாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் இல்லத்திற்கு தொடர்ந்து 4 ஆவது முறையாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் சென்ற போதிலும், அங்கு அவர் இல்லாததால் அவரது உதவியாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

INX மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எனினும், இந்த மனுவை விசாரிப்பதற்கு தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்