அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2019 | 5:04 pm

Colombo (News 1st) நாளை (22) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும் அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மகப்பேறு மருத்துவமனைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மகரகம அபேக்ஷா மருத்துவமனை மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சைப் பிரிவுகளில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பது குறித்து நாளை கூடி ஆராயவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்