காலி மற்றும் மாத்தறையில் மக்கள் மன்றம்

by Staff Writer 20-08-2019 | 9:21 PM
Colombo (News 1st) குரலற்ற மக்களின் பிரச்சினைகளை பொது அரங்கிற்கு கொண்டு வரும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ள ''கிராமத்திற்கு கிராமம் - மக்கள் மன்றம்'' இன்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடம்பெற்றது. தாம் எதிர்நோக்கும் துன்பங்கள் மற்றும் அனுபவங்களை தவலம கிராம மக்கள் அசோக்காராமவில் ஒன்று கூடி மக்கள் மன்ற குழுவினரிடம் பகிர்ந்துகொண்டனர். மக்கள் மன்றத்தின் நிறைவில், மக்கள் சக்தி குழுவினர் தவலம சந்தியில் அப்பகுதி மக்களை சந்தித்தனர். மக்கள் சக்தியின் நான்காண்டு பயணம் தொடர்பான காட்சிகளை மக்கள் மிகுந்த விருப்பத்துடன் பார்வையிட்டனர். பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் மக்கள் சக்தி குழுவினரால் அடையாளங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளில் விரைவாக தீர்வை வழங்கக்கூடிய செயற்றிட்டங்களுக்கு கையொப்பமிடவும் இதன்போது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதேவேளை, மக்கள் சக்தி V-Force அமைப்புடன் பலரும் இணைந்துகொண்டனர். மக்கள் சக்தி மக்கள் மன்றம் இன்று மாலை அக்குரஸ்ஸ பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது. அதிகளவான மக்கள் இதன்போது தமது பிரச்சினைகளை முன்வைக்க வருகை தந்திருந்தனர்.