ஶ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர் சபைக்கு கோப் குழு அழைப்பு

ஶ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர் சபைக்கு கோப் குழு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2019 | 1:30 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர் சபையை இன்று (20) கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் 2.30 மணிக்கு கோப் குழுவில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் சில தினங்களில் கோப் குழுவில் ஆஜராகுமாறு 8 அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் குறித்த அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை மற்றும் உயர் அதிகாரிகளை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

லங்கா சதொச, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களே விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்