வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் ஒருவர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2019 | 11:56 am

Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் 7 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஒருவர் சிறைச்சாலை அதிகாரியைக் கொலை செய்தமைக்கு உதவி புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த T 56 ரக துப்பாக்கிக்கான 63 ரவைகள் மற்றும் 15 சிம் அட்டைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான சந்தேகநபர் மீது ஏற்கனவே போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் இன்று (20) நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்