சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை

சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை

சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2019 | 4:07 pm

Colombo (News 1st) சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

குற்றவாளிக்கு 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு சதொச நிறுவனத்தில் காணப்பட்ட அரிசியை குறைந்த விலையில் தனியாருக்கு விற்பனை செய்தமையூடாக அரசிற்கு 4 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய, இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்தின் 70 ஆவது சரத்திற்கு அமைய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதியை குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக அவர் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்