கொழும்பு குப்பைகளை ரயிலில் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டம்

கொழும்பு குப்பைகளை ரயிலில் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டம்

கொழும்பு குப்பைகளை ரயிலில் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2019 | 1:49 pm

Colombo (News 1st) கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காடு கழிவகற்றல் மீழ்சுழற்சி நிலையத்திற்கு ரயிலில் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் அமுல்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டுசெல்வதற்கான மாற்றுவழியாக எதிர்வரும் சனிக்கிழமை ஒத்திகை நடவடிக்கையாக, குப்பைகள் அடங்கிய லொறிகளை ரயில் ஊடாக கொழும்பிலிருந்து பெரியநாகவில் ரயில் நிலையம் வரை கொண்டுசெல்வதற்கு எதிர்பார்ப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குப்பைகளைக் கொண்டுசெல்லும் ரயில்கள் மற்றும் மார்க்கங்களில் காணப்படும் தடைகள் குறித்து ஆராய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஒத்திகை நடவடிக்கை வெற்றியளிக்கும் பட்சத்தில் கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு ரயில் ஊடாக குப்பைகளைக் கொண்டுசெல்லும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொழும்பின் குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, உரிய பாதுகாப்பை வழங்குமாறு கொழும்பு மாநகர சபை, பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, இடைக்கிடையே ஏற்படும் தடைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகர சபை ஆணையாளர் பாலித நாணக்கார தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்