காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் சிசுவை வீசிய தாய் கைது

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் சிசுவை வீசிய தாய் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2019 | 1:16 pm

Colombo (News 1st) ஹட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் சிசுவை வீசிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் – டிக்கோயா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ள நிலையில், பிறந்த சிசுவை குறித்த தாய் டிக்கோயா ஆற்றில் வீசியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அன்றைய தினம் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிக்க சென்றவர்களால், மிதந்து கொண்டிருந்த அந்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள சிசுவின் தாய் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாயை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்