by Chandrasekaram Chandravadani 19-08-2019 | 7:06 PM
Colombo (News 1st) உடன்படிக்கை அற்ற பிரெக்ஸிட் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவிருப்பதாக, ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தச் சூழ்நிலையில் பிரித்தானியாவே பாதிப்புக்களை எதிர்நோக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
உடன்படிக்கை ஒன்றில்லாமல் பிரித்தானியா வௌியேறுவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் விருப்பமான முடிவு அல்ல என ஆணைக்குழுவின் பேச்சாளர் நடாஷா பேர்ரூட் (Natasha Bertaud) தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரெக்ஸிட்டின் தற்போதைய நிலையில், தற்செயல் ஏற்பாடுகள் எவையும் தேவையற்றவை எனவும் அவர் கூறியுள்ளார்.
உடன்படிக்கை ஒன்றில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறுமாயின் அதனால் பாரிய தாக்கங்கள் ஏற்படும் என நடாஷா பேர்ரூட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பிரித்தானிய பிரஜைகளும் நிறுவனங்களும் தான் அதிகம் பாதிப்படையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே உடன்படிக்கையற்ற பிரெக்ஸிட் திட்டத்தினால் மிகவும் பாதிப்படையவிருப்பது பிரித்தானியாவே என ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜீன் கிளவுட் ஜங்கர் (Jean-Claude Juncker) குறிப்பிட்டதாகவும் நடாஷா பேர்ரூட் தெரிவித்துள்ளார்.