டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் திமுத் கருணாரத்ன முன்னேற்றம்

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் திமுத் கருணாரத்ன முன்னேற்றம்

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் திமுத் கருணாரத்ன முன்னேற்றம்

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2019 | 7:30 pm

Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முன்னேறியுள்ளார்.

புதிய நிரல்படுத்தலில் அவர் எட்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

திமுத் கருணாரத்னவின் 7 வருட கிரிக்கெட் வாழ்வில் டெஸ்ட் நிரல்படுத்தலில் அவரது சிறந்த பெறுபேறு இதுவாகும்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் பெற்றதன் மூலம் திமுத் கருணாரத்ன இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அணித்தலைவரான ஏஞ்சலோ மெத்யூஸ் புதிய நிரல்படுத்தலில் 14 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் நிரல்படுத்தலில் இந்திய அணித்தலைவர் விராத் கொஹ்லி முதலிடத்தை வகிக்கிறார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்