ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதமருக்குக் கடிதம்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதமருக்குக் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2019 | 9:02 pm

Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்பதற்காக 7 நாட்களுக்குள் பாராளுமன்றக் குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர், பிரதமரிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (19) பிற்பகல் நடைபெற்றபோதே இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் அல்லது உத்தேச கூட்டணி தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்