முச்சக்கரவண்டி விபத்தில் தந்தையும் மகனும் பலி

350 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; தந்தை, மகன் உயிரிழப்பு

by Staff Writer 18-08-2019 | 9:41 AM
Colombo (News 1st) எல்ல - கம்பரகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (17) பல்லகெடுவயிலிருந்து பிடபொல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி சுமார் 350 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அவரின் 3 பிள்ளைகள் சிகிச்சைக்காக தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி 35 வயதான தந்தையும் 8 வயதான மகனும் உயிரிந்துள்ளனர். ஹெலபுபுல பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளனர். 12 மற்றும் 8 வயதான சிறுவர்கள் இருவரும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.