by Fazlullah Mubarak 18-08-2019 | 7:54 PM
Colombo (News 1st) அனைவருக்கும் நிழல் உதா கம்மான செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 3 கிராமங்கள் இன்று பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
திம்புலாகலயில் நிர்மாணிக்கப்பட்ட சொரிவில கொடராகலகம , தளுகாணேயில் நிர்மாணிக்கப்பட்ட ஜீவஹத்தகம மற்றும் திசாலாகம ஆகிய கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
66 வீடுகள் 691 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி, அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நாட்டு பொதுமக்களின் அபிலாஷைகளை அறிந்த நேர்மையான, ஊழலற்ற சிறந்த அமைச்சர் சஜித் பிரேமதாச என வர்ணித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினரகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.