ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் மேயருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் மேயருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் மேயருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2019 | 9:20 am

Colombo (News 1st) விவசாய அமைச்சிற்காக குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டடம் தொடர்பில் ஶ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் மேயரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம், அவரை ஆணைக்குழுவிற்கு அழைக்கவுள்ளதாக கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த கட்டடம் தொடர்பில், உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? சட்டரீதியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா ஆகியன தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு இடம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் நடைபெறுவதாகவும் அந்த கட்டடம் சட்டரீதியற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று முன்தினம் நபரொருவர், ஆணைக்குழுவிடம் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்