வழமைக்குத் திரும்பும் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்

வழமைக்குத் திரும்பும் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்

வழமைக்குத் திரும்பும் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2019 | 7:42 am

Colombo (News 1st) வகுப்புப் பகிஷ்கரிப்பைக் கைவிட்டு இன்று (18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று (17) வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எதிர்நோக்கும் சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்குமாறு வலியுறுத்தி கடந்த 15ஆம் திகதி முதல் வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பல கட்டடங்களின் நிர்மாணப்பணிகள் உரிய காலத்தில் நிறைவு செய்யப்படாமல் தற்காலிக கட்டடங்களில் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்வியை உரிய முறையில் தொடர்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் அறிக்கையினூடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்