பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறை

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறை

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறை

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2019 | 1:24 pm

Colombo (News 1st) பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வரையான பதவி உயர்வுகளை வழங்கும் நடைமுறைகள், திறைசேரியின் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்கீழ், 31 500 பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

85000க்கும் அதிகமானோரைக் கொண்ட செயலணியுடன், பொலிஸ் திணைக்களத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வரையான 31 540 அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

பொலிஸ் திணைக்களத்தினால் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக திறைசேரியின் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படுவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்