நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2019 | 12:53 pm

Colombo (News 1st) சர்வதேச டெஸ்ட் சம்பியன்ஷிப்பை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணி இந்த சிறப்பை பெற்றுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 249 ஓட்டங்களையும் இலங்கை அணி 267 ஓட்டங்களையும் பெற்றன.

இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இதன்படி, இலங்கை அணியின் வெற்றி இலக்கு 268 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கை இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு கடந்தது.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 122 ஓட்டங்களை விளாசி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

டெஸ்ட் அரங்கில் அவர் பூர்த்திசெய்யும் ஒன்பதாவது சதம் இதுவாகும்.

முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் 28 ஓட்டங்கயையும் தனஞ்சய டி சில்வா 14 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக இலங்கை அணி 7 வருடங்களின் பின்னர் அடைந்த டெஸ்ட் வெற்றி இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்