‘தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று காலி முகத்திடலில்

‘தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று காலி முகத்திடலில்

‘தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று காலி முகத்திடலில்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2019 | 7:58 am

Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் ‘தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று (18) காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

தமது முன்னணியுடன் இணைந்துள்ள குழுக்கள் மற்றும் அமைப்புகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

முற்போக்கான சக்திகள், கல்விமான்கள், கலைஞர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை இணைத்து தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டை முன்கொண்டு செல்லக்கூடிய மாற்றுத் தலைவர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கவிருப்பதாகவும் குறித்த வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ளதாகவும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மாற்றம், புதிய அரசியல் பயணம் மற்றும் ஜனநாயகம், நல்லாட்சி ஆகியவற்றை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்