சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2019 | 1:29 pm

Colombo (News 1st) சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டம் நாளை (19) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

இதற்காக 1913 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இது 24 மணித்தியாலங்களும் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசி இலக்கத்தினூடாக கிடைக்கும் முறைப்பாடுகளின் இரகசியத் தன்மை பேணப்படும் எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமாக மதுபானத்தை வைத்திருத்தல், கொண்டுசெல்லல், அனுமதி வழங்கப்பட்டுள்ளதை விட அதிக எண்ணிக்கை போத்தல்களை வைத்திருத்தல் ஆகியன தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்