by Bella Dalima 17-08-2019 | 4:53 PM
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கட்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
இந்தியாவின் மக்கட்தொகை சுமார் 133 கோடியாக உள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கட்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. சீனாவின் மக்கள்தொகை சுமார் 138 கோடியாகும்.
இந்நிலையில், 2027 ஆம் ஆண்டில் இந்திய மக்கட்தொகை சீனாவை விஞ்சிவிடும் என்று ஐ.நா. கணித்துள்ளது. மேலும், 2065-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் மக்கட்தொகை குறையத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், 2027 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கட்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்ற கணிப்பை ஐ.நா. வெளியிட்டுள்ளது.