ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி

by Staff Writer 17-08-2019 | 8:20 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. Sajith Premadasa Generation அணியினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு - கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் ஆரம்பமான பேரணி, கல்லடி பாலம் வரை பயணித்தது.