கொழும்பு - ஹங்வெல்ல வீதி போக்குவரத்தில் இடையூறு

கொழும்பு - ஹங்வெல்ல வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 17-08-2019 | 3:57 PM
Colombo (News 1st) கொழும்பு - ஹங்வெல்ல வீதியில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (18) அதிகாலை 1 மணி வரையிலான காலப்பகுதியில் வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நவகமுவ ஶ்ரீ பத்தினி ஆலயத்தின் வருடாந்த எசல பெரஹரவிற்காக வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர். இதேவேளை, நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நீர்வெட்டும் நிகழ்வு இம்பெறவுள்ளதால், அந்த காலப்பகுதியில் கொழும்பு - ஹங்வெல்ல வீதியூடான வாகனப் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.