கொழும்பு – ஹங்வெல்ல வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு – ஹங்வெல்ல வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு – ஹங்வெல்ல வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2019 | 3:57 pm

Colombo (News 1st) கொழும்பு – ஹங்வெல்ல வீதியில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (18) அதிகாலை 1 மணி வரையிலான காலப்பகுதியில் வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நவகமுவ ஶ்ரீ பத்தினி ஆலயத்தின் வருடாந்த எசல பெரஹரவிற்காக வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நீர்வெட்டும் நிகழ்வு இம்பெறவுள்ளதால், அந்த காலப்பகுதியில் கொழும்பு – ஹங்வெல்ல வீதியூடான வாகனப் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்