கேரளாவில் மழை வௌ்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

கேரளாவில் மழை வௌ்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

கேரளாவில் மழை வௌ்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2019 | 5:08 pm

Colombo (News 1st) கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 8 ஆம் திகதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், நிலச்சரிவும் ஏற்பட்டது. நேற்று மழை ஓய்ந்த நிலையில், மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது.

தற்காலிக முகாம்களில் ஒன்றரை இலட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லியில் இருந்து 22 தொன் மருந்துப்பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்