கதிர்காமத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கதிர்காமத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கதிர்காமத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2019 | 3:45 pm

Colombo (News 1st) கதிர்காமம் – பெரகிரிகம பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 9.15 அளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகங்களை மூடிக்கொண்டு வீடொன்றுக்குள் புகுந்த மூன்று பேர், வீட்டின் உரிமையாளரை கூரான ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

பலத்த காயமடைந்த குறித்த நபர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கதிர்காமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்