பைனஸ் மர செய்கையை முன்னெடுக்காதிருக்க தீர்மானம்

பைனஸ் மர செய்கையை தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்க தீர்மானம்

by Staff Writer 16-08-2019 | 4:03 PM
Colombo (News 1st) பைனஸ் மர செய்கையை தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்க வனப்பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது. பைனஸ் மரங்களினால் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுதாகவும் மண்ணின் தன்மையில் மாற்றம் ஏற்படுவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் 16,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பைனஸ் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் பைனஸ் மரங்களால், நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை சுமார் 1000 ஹெக்டேயர் காணிகளில் இருந்து பைனஸ் மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்கள நாயகம் W.A.C. வேரகொட குறிப்பிட்டார்.