by Staff Writer 16-08-2019 | 8:55 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி விளக்கமறியல் உத்தரவை நீடித்து இன்று உத்தரவிட்டார்.
அதற்கமைய, சந்தேகநபர்கள் 64 பேரும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய தெளஹீத் ஜாமாத் அமைப்பினால் நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடியை சேர்ந்த 64 பேரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.