இலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ADB கடனுதவி

இலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

by Staff Writer 16-08-2019 | 5:43 PM
Colombo (News 1st) இலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த 160 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது. ரயில் சேவையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது. இலங்கை ரயில்வே துறைக்கு ஆசிய அபிவிருத்தி வழங்கும் முதலாவது கடனுதவி இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.