இலங்கை அமரபுர மற்றும் ராமஞ்ஞ பீடங்கள் ஒன்றிணைந்தன

by Staff Writer 16-08-2019 | 9:04 PM
Colombo (News 1st) இலங்கை அமரபுர பீடம் மற்றும் ராமஞ்ஞ பீடம் ஆகியன இன்று ஒன்றிணைந்தன. இலங்கையில் சியம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த பீடங்கள் காணப்படுகின்றன. அவற்றில், இலங்கை அமரபுர மற்றும் ராமஞ்ஞ பீடம் ஆகியன இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று ஒன்றிணைந்தன. இலங்கை அமரபுர பீடம் சார்பில் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மவாச தேரரும் ராமஞ்ஞ பீடம் சார்பில் மகாநாயக்கர் நாபன பிரேமசிறி தேரரும் இரு பீடங்களும் ஒன்றிணைவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இலங்கை அமரபுர பீடம் 1802 ஆம் ஆண்டிலும் ராமஞ்ஞ பீடம் 1863 ஆண்டிலும் ஸ்தாபிக்கப்பட்டன. பௌத்த தர்மத்தை நாட்டில் நிலைநிறுத்த இந்த இரண்டு பீடங்களும் அர்ப்பணிப்பு செய்கின்றன. பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக இரு பீடங்களும் இன்று ஒன்றிணைந்தன. இரு பீடங்களும் ஒன்றிணைந்து அமரபுர - ராமஞ்ஞ சாமக்ரீ பீடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இரண்டு பீடங்களினதும் மகாநாயக்கர்கள் புதிய பீடத்தின் தலைமைத்துவத்தை வகிக்கவுள்ளனர்.

ஏனைய செய்திகள்