தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் நௌஃபர் மௌலவியின் மகன் கைது

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் நௌஃபர் மௌலவியின் மகன் கைது

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் நௌஃபர் மௌலவியின் மகன் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2019 | 3:49 pm

Colombo (News 1st) தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய தலைவரான நௌஃபர் மௌலவியின் மகனான மொஹமட் நௌஃபர் அப்துல்லா அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

16 வயதான குறித்த சந்தேகநபர் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பினால் அபூ ஹசாம் என பெயர் மாற்றப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, அம்பாறை பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை – குக்குனுகொல்ல பகுதியில் வசித்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் தந்தையான நௌஃபர் மௌலவி தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்