திருமணத்தில் விருப்பம் இல்லை: வரலட்சுமி சரத்குமார்

திருமணத்தில் விருப்பம் இல்லை: வரலட்சுமி சரத்குமார்

திருமணத்தில் விருப்பம் இல்லை: வரலட்சுமி சரத்குமார்

எழுத்தாளர் Bella Dalima

16 Aug, 2019 | 4:57 pm

தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னி ராசி படத்தில் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்விலேயே வரலட்சுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்