இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 177 ஓட்டங்களால் முன்னிலை

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 177 ஓட்டங்களால் முன்னிலை

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 177 ஓட்டங்களால் முன்னிலை

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2019 | 8:21 pm

Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 177 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை இன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 249 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களுடன் இன்றைய மூன்றாம் நாளை ஆரம்பித்தது.

39 ஓட்டங்களுடன் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல 61 ஓட்டங்களையும் சுரங்க லக்மால் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

கடைசி 3 விக்கெட்களும் 40 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட, இலங்கையின் முதல் இன்னிங்ஸ் 267 ஓட்டங்களுடன் முடிந்தது. அதற்கமைய 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது.

டொம் லதம் 45 ஓட்டங்களைப் பெற்றார். நியூஸிலாந்து ஒரு கட்டத்தில் 124 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது. எனினும், B.J.வட்லிங் மற்றும் TG சௌதீ ஜோடி ஏழாம் விக்கெட்டிற்காக 54 ஓட்டங்களைப் பகிர்ந்தது. B.J.வட்லிங் தனது 17 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை எட்டினார். 63 பந்துகளை எதிர்கொண்ட TG சௌதீ 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

நியூஸிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைப்பட்டு இன்றைய நாள் போட்டி முடிவுக்கு வந்தது. B.J.வட்லிங் 63 ஓட்டங்களுடனும் வில்லியம் செமர்விலி 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் லசித் அம்புல்தெனிய 4 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்