அஜித் டயஸுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 15-08-2019 | 1:48 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அஜித் டயஸ், கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். மத்தள விமான நிலையத்தின் ஒரு பகுதியில் நெல் களஞ்சியப்படுத்தியமை மற்றும் அரச நிறுவனங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய வாக்குமூலம் பெறுவதற்காக அஜித் டயஸ் அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன், புவியியல் நிபுணர் K.M. அமரசேனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின், தங்கம் கலந்த மண்ணை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதேவேளை, கல்வி அமைச்சினால் பாடசாலை சீருடைகளுக்குப் பதிலாக, வவுச்சர் வழங்கியதில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலும் இலங்கை மின்சார சபை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்தும் இன்று (15) ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சட்டவிரோதமாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலும் இன்று ஆணைக்குழுவில் விசாரணை இடம்பெறவுள்ளது. இதனிடையே, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் கோரிக்கைக்கு இணங்க, எதிர்வரும் 9 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.