புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-08-2019 | 5:53 AM
  Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. நிதி அமைச்சிலுள்ள அதிகாரிகளை பஸ்களிலும் ரயில்களிலும் அனுப்ப வேண்டும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 02. வவுனியாவிற்கு சென்றிருந்த பிரதமரை சந்திக்க முயன்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைப் பொலிஸார் தடுத்துள்ளனர். 03. செஞ்சோலை படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 04. அறுவைக்காடு கழிவகற்றல் நிலையத்தில் கொட்டுவதற்காக கொழும்பிலிருந்து கழிவுகளை ஏற்றிச்சென்ற இரண்டு லொறிகள் விபத்திற்குள்ளாகியுள்ளன. 05. அரசாங்கத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான செலவை உள்ளடக்கிய இடைக்கால கணக்கறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 06. கொழும்பில் சேகரிக்கப்பட்ட 1300 மெட்ரிக் தொன் குப்பைகள் அறுவைக்காட்டில் கொட்டப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. 07. நாடு முழுவதுமுள்ள யானைகள் தொடர்பான விபரங்களைத் திரட்டுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. 08. அடுத்த வருடத்திற்கான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 09. நாட்டிலுள்ள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்களைப் பறக்கவிடுவது சட்டவிரோதமானதும் தண்டனைக்குரிய குற்றமுமாகும் என H.S. ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். 10. வேலை வாய்ப்பற்ற அனைத்து வௌிவாரிப் பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 11. நெடுந்தீவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் நிதி, பிரதேச செயலக அதிகாரிகளால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தெரியவந்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோர முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 02. ஹொங்கொங்கில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் மேலும் வலுப்பெற்றுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய, டெஸ்ட் அரங்கில் நான்காவது 5 விக்கெட் பெறுதியைப் பதிவு செய்துள்ளார். 02. மேற்கிந்தியத்தீவுகள் அணியில் அதிக எடையுடைய ஒருவரான ரஹ்கீம் கோர்ன்வால் (Rahkeem Cornwall) என்பவர் விளையாடவுள்ளார்.