6 ஆவது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார் மோடி

செங்கோட்டையில் 6 ஆவது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார் மோடி

by Staff Writer 15-08-2019 | 5:46 PM
Colombo (News 1st) இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது. பிரித்தானிய காலனித்துவத்தின் இரும்புப் பிடியில் சிக்கியிருந்த இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி விடுதலை பெற்றது. செங்கோட்டைக்கு இன்று காலை வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிரதமராக நரேந்திர மோடி ​செங்கோட்டையில் 6 ஆவது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார். காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்த மோடி, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 A ஆகியவற்றை இரத்து செய்ததன் மூலம், சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்கி உள்ளதாகக் கூறியுள்ளார். சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.