கம்பஹாவில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கம்பஹாவில் இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

by Staff Writer 15-08-2019 | 8:19 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு இன்றும் நாளையும் (15, 16) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36 858 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், வருடத்தில் அதிக நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 8 407 நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் இம் மாதத்தின் கடந்த 14 நாட்களில் மாத்திரம் 2 079 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்ககை் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், தமது சூழலைத் துப்புரவாக வைத்துக் கொள்ளுமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவு, மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.