எவரெஸ்ட மலையேறிகளுக்கான புதிய விதிகள் அறிமுகம்

எவரெஸ்ட மலையேறிகளுக்கான புதிய விதிகள் அறிமுகம்

by Staff Writer 15-08-2019 | 11:07 AM
Colombo (News 1st) எவரெஸ்ட் மலைக்கு ஏறும் மலையேறுபவர்களுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயற்சிப்பவர்கள் முதலில் அனுபவம் வாய்ந்த மலையேறுபவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என நேபாள அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் குழு பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் காலங்களில் எவரெஸ்ட் மலையேறுபவர்கள், ஏற்கனவே மலையேறியமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையேறுபவர்கள் குறைந்தபட்சம் 6 500 மீற்றர் உயரத்திற்கு மலையேறி இருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில், எவரெஸ்ட் மலைப்பகுதியில் 11 பேர் உயிரிழந்ததுடன் பலர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை, மலையேறுபவர்களிடமிருந்து குறைந்தது 35,000 அமெரிக்க டொலர் கட்டணமும் அறிவிடப்படவுள்ளது.