வறட்சியால் 4362 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் அழிவு

வறட்சியால் 4362 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் அழிவு

வறட்சியால் 4362 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் அழிவு

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2019 | 9:51 am

Colombo (News 1st) நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக சிறுபோக நெற்செய்கையில் 4 362 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

72 பிரதான நீர்த்தேக்கங்களின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொண்ட 509 இலட்சம் பயிர்நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பிரதான காலநிலை ஆய்வாளர் ரஞ்சித் புண்யவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 43 000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உப பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர, 272 மத்திய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்பட்ட நீரிலிருந்து 68 735 ஹெக்டேயர் நெல் மற்றும் 6 468 ஹெக்டேயர் மேலதிகமாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டவற்றின் அறுவடை ஆரம்பமாகியுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பிரதான காலநிலை ஆய்வாளர் ரஞ்சித் புண்யவர்தன தெரிவித்துள்ளார்.

போதுமான நீர் இன்மையினால் அடுத்த பெரும்போகத்திற்கு பயிர்ச்செய்கை மேற்கொள்வது கேள்விக்குறியாகவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்