மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2019 | 7:00 am

Colombo (News 1st) இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று (15) வெகுவிமர்சையாக நடைபெறுகின்றது.

ஈழத்தின் வட புலத்தில் மன்னார் மாவட்டத்தின் மடு – மாந்தைப் பிரதேசத்தில் வீற்றிருக்கும், மருதமடு தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ இன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுவதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சூசை, நியூஸ்பெஸ்ட்க்குத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்