by Staff Writer 15-08-2019 | 3:38 PM
Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 23 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த காணியே இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆவணங்களில் கையொப்பமிடும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, காணி விடுவிப்பிற்கான ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இதன்போது கையளித்துள்ளார்.